இந்தியாவில் 234 நகரங்களில் புதிதாக தனியார் FM ரேடியோ சேவைக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன் பிறகு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர் உட்பட 11 நகரங்களில் தனியார் எப்எம் ரேடியோ சேவைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சரக்கு மற்றும் சேவை வரி தவிர்த்து மொத்த ஜிஎஸ்டி வருவாயில் 4 சதவீதத்தை வருடாந்திர உரிம கட்டணமாக வசூலிக்கும் முன்மொழிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதே போன்று நாட்டித் புதிதாக 12 தொழிற்பேட்டைகள் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி 28,602 கோடி முதலீட்டில் தொழிற்பேட்டைகள் அமைய உள்ளது. ஆனால் இந்த பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.