
ராஜஸ்தான் மாநிலம் பூந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் சேதன்(24) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் காணாமல் போன சிறுமியை தேடிய தந்தை காவல் துறையில் புகார் கொடுத்தார்.
இவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஒரு மாதத்திற்கு பின் சிறுமியை மீட்டனர். பாலியல் தொல்லை கொடுத்த சேதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த சேதன் பாலியல் தொல்லை செய்த அதே சிறுமியை 18 வயது முடிந்த நிலையில் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
இந்த சமயம் சேதன் மீது பாலியல் வன்புணர்வு தொடர்பாக நடந்து கொண்டிருந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வாதாரத்திற்காக 4 லட்சம் ரூபாயை குற்றவாளி கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.