பெங்களூருவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மையினர் சங்கத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் சங்கத்தின் உறுப்பினரான சீகே ரவிச்சந்திரன் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நன்றாக பேசிக் கொண்டிருந்த ரவிச்சந்திரன் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனை தொடர்ந்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். செய்தியாளர்கள் சந்திப்பில் நன்றாக பேசிக் கொண்டிருந்த நபர் மயங்கி விழுந்து உயிரிழந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பகிரப்பட்டு பார்ப்போரை அதிர்ச்சடைய செய்துள்ளது.