தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான தேதியில் திடீரென குழப்பம் ஏற்பட்ட நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் வெளியான நிலையில் குரூப் 2 வில் 507 பணியிடங்களும், 2ஏ-வில் 820 பணியிடங்களும் என மொத்தம் 2,327 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது.

இந்த பணிகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையில் தேர்வு தேதி மாற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததோடு பணியிடங்களும் குறைக்கப்படும் என்று இருந்ததால் தேர்வர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. இதனால் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மேலும் அதன்படி ஏற்கனவே அறிவித்தபடி செப்டம்பர் 14ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.