இந்தியாவில் கடந்த ஒரு வருடமாகவே ரயில் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. மாதத்தில் ஏதாவது ஒரு ரயில் விபத்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது வாரணாசியிலிருந்து அகமதாபாத் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் கான்பூர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

அதிகாலை 2.30 மணி அளவில் நடந்த இந்த விபத்தில் ரயிலின் 20 பெட்டிகள் அடுத்தடுத்து தடம் புரண்டு உள்ளன. தண்டவாளத்தில் இருந்த பெரிய கல் மீது இஞ்சின் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதில் பயணிகள் யாரும் காயமும் அடையவில்லை என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.