புனேயின் ஹடாப்சர் பகுதியில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில், 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனே ஹாடாப்சர் பகுதியில் வசித்து வரும் மூன்று சிறுவர்கள் 3 சிறுமிகளின் புகைப்படங்களை தவறாக சித்தரிக்கும் வகையில் மோர்ஃப் செய்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஹடாப்சர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க , அதன் அடிப்படையில், போலீசார் மூன்று சிறுவர்களையும் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த ஜூன் மாதம் நடந்துள்ளது. புகார் அளித்தவரின் மகள் புனேயில் உள்ள ஒரு புகழ்பெற்ற பள்ளியில் படித்து வருகிறார். 16 வயது சிறுவன் ஒருவன் தனது மொபைல் போனில் உள்ள டெலிகிராம் BOT பயன்படுத்தி, புகார் அளித்தவரின் மகள் மற்றும் அவருடைய 3 நண்பர்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி மோர்ஃப் செய்துள்ளான். பின்னர் அவற்றை தனது நண்பர்களுடன் பகிர்ந்துள்ளான். சிறுவர்கள் செய்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசார் சிறுவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.