விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் நடைபெறும். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சியின் சில காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த வாரம் பத்து வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள், எப்படி என்று ஆச்சரியப்படும் 2K பிள்ளைகள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. அதில் பெண்ணின் தந்தை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விடுவதாக மிரட்டல் விடுத்தும் தன்னுடைய காதலன் தான் முக்கியம் என்று அந்த தருணத்திலேயே பெண் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அதன் பிறகு நண்பர்கள் சிலர் தங்களுடைய ரத்தத்தை தானம் செய்து அதில் கிடைத்த பணத்தை வைத்து திருமணம் செய்து வைத்துள்ளதாக அரங்கத்தில் அவர் கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.