மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில் போரேன் காட் என்னும் பகுதி அமைந்துள்ளது.இந்த பகுதியில் உள்ள தோஷேகர் நீர்வீழ்ச்சி சுற்றுலா தளமாக இருக்கிறது . இதனை சுற்றிப் பார்ப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை புனேவை சேர்ந்த *நஸ்ரீன்* (29) என்பவர் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அப்போது அங்கு பெய்த கனமழையின் காரணமாக அந்தப் பகுதி மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நஸ்ரீன் செல்பி எடுப்பதற்காக நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென நிலை தடுமாறி 100 அடி பள்ளத்தாக்கில் தவறி கீழே விழுந்து விட்டார். இந்தப் பெரு விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக அந்த பெண் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதனை அறிந்த மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர். அவர்களுடன் சேர்ந்து உள்ளூர்வாசிகள் மற்றும் ஊர்க்காவல் படையினர் அந்தப் பெண்ணை காப்பாற்றினர். . இதைத்தொடர்ந்து அவருக்கு சில காயங்கள் ஏற்பட்டதால் சதாராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.