
சீன நாட்டில் தற்போது ஒரு வினோதமான கலாச்சாரம் என்பது பெருகி வருகிறது. அதாவது கடைகளில் பொருட்கள் மற்றும் காய்கறிகள் வாங்க வரிசையாக நிற்பது போன்று இளம்பெண்கள் ஒரு இடத்தில் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் முன்பு விலை பட்டியல் அடங்கிய ரேட் கார்டுகள் உள்ளது. அதில் அவர்கள் கட்டிப்பிடிக்க ஒரு கட்டணமும், அவர்களுக்கு முத்தம் கொடுக்க ஒரு கட்டணமும், ஒன்றாக சென்று தியேட்டர்களில் படம் பார்க்க ரூ.150 கட்டணமும், வீட்டு வேலைகள் செய்ய ரூ.2000 கட்டணமும், ஒன்றாக சேர்ந்து மது குடிக்க ரூ. 4100 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ரூ.11 முதல் அதிகபட்சமாக ரூ.4100 வரை கட்டணம் உள்ளது.
இதில் ரூ.11 கொடுத்தால் இளம் பெண்களை கட்டிப்பிடித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் ரூ.110 கொடுத்தால் அவர்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்ளலாம். இருப்பினும் இதில் பாலியல் உறவுக்கு மட்டும் அனுமதி கிடையாது. அதாவது தனிமையில் இருக்கும் ஆண்களின் குறையை போக்குவதற்காக இதனை ஒரு சேவையாக செய்து வருவதாக அந்த இளம் பெண்கள் கூறுகிறார்கள். இருப்பினும் பணம் சமாதிப்பதற்கு பெண்கள் தேர்ந்தெடுத்துள்ள வழி என்று இதனை பலரும் விமர்சித்து வருகிறார்கள். மேலும் இதுபோன்ற மோசமான கலாச்சாரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் பலர் வலியுறுத்துகிறார்கள்.