
சென்னை அம்பத்தூரை அடுத்துள்ள பகுதியில் ரவிந்தர் பரீக் (53) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அந்த விளம்பரம் ஸ்டாக் மார்க்கெட் ட்ரேடிங் குறித்த விளம்பரம். இது தொடர்பாக ரவீந்தர் பரீக் அந்த விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு போன் செய்து பேசியுள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம் என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் வங்கி கணக்கை ஒன்றை பகிர்ந்து உள்ளனர்.
இதனை நம்பிய ரவிந்தர் பரீக் மர்ம நபர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு 57 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயை அனுப்பி உள்ளார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் முதலீடு செய்த பணத்தையும், கமிஷன் தொகையையும் தராமல் இருந்துள்ளனர். அதன் பின் தான் ஏமாந்ததை உணர்ந்த ரவிந்தர் பரீக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பரிதா (38) மற்றும் கண்ணன் (54) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. இவர்களை காவல் துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதேப்போன்று வேறு ர் யாரிடமும் அவர்கள் மோசடி செய்துள்ளனரா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.