
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி காலமானார். தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் வேலையில் அவருடைய 6-வது ஆண்டு நினைவு தினம் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு திமுக கட்சியின் தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில் சென்னையில் ஆகஸ்ட் 7ல் அமைதி பேரணி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் காலை 7 மணிக்கு அமைதி பேரணி தொடங்கிய கலைஞர் நினைவிடத்தில் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.