சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக அதிகரித்து வரும் நிலையில் இன்று மீண்டும் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 6460 ரூபாயாகவும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 51,680 ரூபாய் ஆகவும் இருக்கிறது.
இதேபோன்று 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6915 ரூபாயாகவும், ஒரு சவரன் ரூ. 55,320 ஆகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 91 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 91 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கிறது.
