இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் 3 தொடர்கள் கொண்ட டி20 போட்டியில் விளையாடியது. இதில் முதல் 2 தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று 3-வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இலங்கை அணி முதலில் டாஸ் வென்ற நிலையில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வீரர்கள் தடுமாறினர். இதனால் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்கத்தில் வீரர்கள் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதனால் ஆட்டம் இறுதியில் டிராவில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது‌. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 3 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 2 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் இழந்தது. இதைத்தொடர்ந்து வெறும் 3 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. இந்த பந்தை முதலில் சந்தித்த கேப்டன் சூரியகுமார் முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். இதன் மூலம் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.