
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சைபர் குற்றங்கள் என்பது அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அரசு சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கட்டணம் செலுத்தாததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் என்று குறுஞ்செய்தி வந்தால் அதனை பொருட்படுத்த வேண்டாம் எனவும் முதலில் உங்கள் கட்டண நிலையினை மின்வாரிய வலைத்தளம் அல்லது செயலியில் சரிபார்க்க வேண்டும் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது. மோசடி கும்பல் இது போன்ற குறுஞ்செய்தியை அனுப்பி தனிப்பட்ட தகவலை திருடி மோசடி செய்கின்றன. எனவே குறுஞ்செய்தி வந்த எண்ணை அழைக்கவும் அல்லது பணம் செலுத்தவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.