தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதாவது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியை தாண்டிய நிலையில் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உட்பட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அவர் பிற்பகல் 3 மணிக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அதன்படி 12,000 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட இருக்கிறது.