சென்னை படுவஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி ஒருவருக்கு 14 வயதில் மகள் இருக்கிறார். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக இரண்டாம் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இவர்களுடைய மகள் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணின் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் லட்சுமியின் வீட்டிற்கு சென்று சிறுமியை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதன்பின் காவல்துறையினர் இதுபற்றி சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பல திடுகிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது லட்சுமி அவருடைய மாமியார் கற்பகம், சகோதரி கவிதா மற்றும் இரண்டாவது கணவரான பிரகாஷ் ஆகியோர் விபசார தொழிலில் ஓராண்டு காலமாக சிறுமியை வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியது தெரியவந்தது.

இதை தொடர்ந்து காவல்துறையினர் அதிரடியாக லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்தனர். அவர்கள் சிறுமியை விபசாரத் தொழிலில் ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்துள்ளனர். அதன்பிறகு இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பூசாரி சீனிவாசன் மற்றும் புரோகிதரான தாமோதரன் ஆகிய இருவருக்கும் சம்பந்தம் இருப்பது தெரியவந்தது.

இதனால் காவல்துறையினர் இவர்கள் 2 பேரையும் கைது செய்து மொத்தம் 6 பேரையும் சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று வழக்கில் தொடர்புடைய சீனிவாசன் மற்றும் தாமோதரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3 பெண்கள் உட்பட 8 பேரை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை காவல்துறையினர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.