தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்த நிலையில் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலமாக மட்டுமே இன்று தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவர் கடந்த 1966 ஆண்டு பிறந்த நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக விக்ரம் அறிமுகமான நிலையில், தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் திரைப்படத்தில் விக்ரம் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். அதன்பின் பல வெற்றி படங்களில் நடித்துள்ள விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு 12 வயது இருக்கும்போது ஒரு விபத்தில் சிக்கினார். இதனால் அவர் கை, கால்கள் செயலிழந்த நிலையில் 3 வருடங்கள் வீல் சேரில் தான் வாழ்க்கையை கழித்தார். இதிலிருந்து சரிவர கிட்டத்தட்ட 23 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். மேலும் வீல்சேரில் முடங்கினாலும் 25 ஆப்ரேஷன் செய்த பிறகு மீண்டும் குணமாகி தற்போது தமிழ் சினிமாவே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு முன்னணி ஹீரோவாக நடிகர் விக்ரம் உயர்ந்துள்ளது பாராட்டத்தக்க விஷயம் ஆகும்.