திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு அனுதினமும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவிலில் நடைபெற்ற பூஜையில் பக்தர் ஒருவர் கலந்து கொண்டார். அப்போது ஒரு அம்மன் சிலைக்கு ரேஷன் சேலை கட்டப்பட்டிருந்ததை பார்த்தார். அவர் அதை புகைப்படமெடுத்து இணையதளத்தில் பதிவிட்டார். இந்த போட்டோ  இணையதளத்தில் வைரலானது.

இந்நிலையில் இதுகுறித்து விசாரிக்கும் போது கோவிலில் திரு ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக அம்மனுக்கு சேலையை சாத்தினர். அதில் ஒருவர் ரேஷன் சேலையை வழங்கியுள்ளார். அப்போது பௌர்ணமியின் போது அந்த சேலை  அம்மன் சிலைக்கு அனுவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதைப் பற்றி கோவில் நிர்வாகத்திற்கு தெரிந்ததும் உடனடியாக சேலை மாற்றப்பட்டது.