
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர் சூர்யா. இவர் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெயர் “கங்குவா”, இதனை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் முதல் பாடலான Fire Song வருகிற 23ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இதில் திஷா பாதனி ஹீரோயினாக நடித்த நிலையில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதன் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி 38 மொழிகளில் 3d -யாக மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.