
கர்நாடக மாநிலம் மடபுரா என்னும் பகுதியில் முஸ்தபா ஷரகுனி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி உட்பட இரட்டை குழந்தைகள் இருக்கும் நிலையில் அவருடைய தாயாரும் உடன் வசித்து வருகிறார். அங்கு கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சம்பவநாளன்று கனமழை பெய்தது. அந்த சமயத்தில் முஸ்தபா அவரது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை அதிகரித்ததால் அவரது வீட்டின் மேல் கூரை இடிந்து விழுந்தது.
இதில் அவரின் தாயார் மற்றும் இரட்டை குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த முஸ்தபா மற்றும் அவரது மனைவியை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.