இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக செல்போன் அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

வங்கிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாக, போலியான மெசேஜ் அனுப்பி மோசடி நடப்பதாக, வங்கி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலி ஆன்லைன் ஆப்களை  பதிவிறக்கம் செய்யும்போது, நம்முடைய தரவுகள் மோசடி கும்பல்களிடம் சிக்கி விடுகிறது. இதை பயன்படுத்தி வங்கி SMSபோன்றே, அவர்கள் மெசேஜ் அனுப்புவதாகவும், இதை நம்பி, link-ஐ  அழுத்தினால், நம்முடைய வங்கிக்கணக்கில் இருந்து பணம் காணாமல்  போய்விடும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்