
சென்னை ராயப்பேட்டை பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி ஒருவர் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் அவருடைய தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னர் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமியின் அக்காவை நிச்சயம் செய்த மணிகண்டன் என்பவர் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
சரித்திர பதிவேடு குற்றவாளியான இவரிடமிருந்து சிறுமியை மீட்ட போலீசார் அவரிடம் விசாரித்தபோது தன்னை மிரட்டி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து மணிகண்டனை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.