
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் பில்லி இபதுல்லா. இவருக்கு தற்போது வயது 88 ஆகிறது. இந்நிலையில் பில்லி இபதுல்லா உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக நேற்று மரணமடைந்தார். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுக இன்னிங்ஸ்ல் சதம் அடித்த சாதனையாளர் ஆவார்.
கடந்த 1964ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது பில்லி 166 ரன்கள் குவித்தார். மேலும் இவருடைய மறைவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.