
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரவுடி திருவேங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டார். இவருடைய கொலை வழக்கில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதில் திருவேங்கடமும் அடங்குவார். இவர்களை காவல்துறையிடம் விசாரணைக்கு அழைத்து சென்ற போது திருவேங்கடம் தப்பி செல்ல முயற்சி செய்துள்ளார்.
இதனால் அவரை காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவேங்கடம் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக புதுக்கோட்டை அருகே திருச்சி ரவுடி துரை என்கவுண்டர் ஆல் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் தற்போது ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இது அடுத்தடுத்து பரபரப்புகளை ஏற்படுத்தி உள்ளது.