தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் நாளை திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.‌

அதன் பிறகு ஒரு சில இடங்களில் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இங்கு அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கக்கூடும். மேலும் தென் தமிழக கடலோர பகுதிகள், தெற்கு வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் ஜூலை 15ஆம் தேதி 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அன்றைய தினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.