
ஆந்திரப்பிரதேச மாநிலம் ஏளூர் மாவட்டம் கொய்யாலகுடம் பகுதியை சேர்ந்த விவசாயி துர்கா ராவ். இவர் கழுதைப்பால் விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். விவசாயம் செய்து வரும் இவர் சந்தையில் கழுதைப்பாலுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் கழுதைப்பண்ணை அமைத்து சுயதொழில் தொடங்கியுள்ளார்.
இதனால் இவர் முதலில் 40 கழுதைகளை வாங்கி பண்ணையில் வளர்த்து மாதந்தோறும் சுமார் ரூ.7 லட்சம் வருமானம் ஈட்டுகிறார். ஒரு லிட்டர் கழுதைப்பால் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.