தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் நேற்று இரவு மழை பெய்துள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூர், நீலகிரி, கரூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி, திருச்சி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மேலும் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
