இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்றே சொல்லலாம். குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுத்தாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் காதலிப்பதாக கூறி ஏமாற்றப்பட்ட சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.
தீபக் என்ற இளைஞரை பாதிக்கப்பட்ட சிறுமி காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியை தீபக் அறையில் அடைத்து வைத்து, அவரது நண்பர்கள் ஆகாஷ், ஜதின், மற்றொரு 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து 10 நாட்களாக பலாத்காரம் செய்துள்ளனர் இது தொடர்பாக காவல்துறையினர் 4 பேரை கைது செய்தனர்.
