கர்நாடக மாநில பாஜக கட்சியின் முன்னாள் மந்திரி பிசி பட்டீல். இவருக்கு வனஜா என்ற மனைவியும் இரு மகள்களும் இருக்கிறார்கள். இவருடைய மூத்த மகள் சௌமியாவுக்கு திருமணம் ஆகி பிரதாப் குமார் (41) என்ற கணவர் இருக்கிறார். இவர் தொழிலதிபராக இருக்கும் நிலையில் தனியார் பள்ளி ஒன்றிணையும் நிர்வகித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சாலையில் கார் ஒன்று நீண்ட நேரம் ஆக கேட்பாரற்று நின்றது.

அப்போது அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து காரினை பார்த்த போது விஷம் குடித்த நிலையில் பிரதாப் குமார் மயங்கிய நிலையில் காருக்குள் கிடந்தார். உடனே அவரை முதியவர் ஒருவர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அப்போது அவருடைய செல்போனை எடுத்து பார்த்தபோது அது முன்னாள்  மந்திரியின் மருமகன் என்பது தெரிய வந்ததால் மருத்துவர்கள் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரதாப் குமார் பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.