இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிய ஆச்சரியமூட்டுவதாக அமைகிறது. அந்த வகையில் தற்போது முதலை ஒன்று பீர் கேனை திறக்கும் வீடியோ வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,அமெரிக்க நாட்டில் உள்ள புளோரிடோ மாகாணத்தில் வாலிபர் ஒருவர் படகில் சென்றார். அவருடன் நண்பர்கள் சிலரும் சென்றனர். அப்போது பீர் கேன் ஒன்றினை திறக்க வாலிபர் முயற்சி செய்கிறார்.
ஆனால் அவரால் அதை திறக்க முடியாததால் கடலில் சில உணவுப் பொருட்களை வீசுகிறார். அப்போது முதலை ஒன்று வந்தது. அந்த சமயத்தில் முதலையின் வாயில் பீர் கேனை அந்த வாலிபர் வைத்தார். உடனடியாக அந்த கேன் திறந்தது. பின்னர் அதை தன்னுடைய நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
Using a gator as a can opener. Dudes rock. pic.twitter.com/uUCbOk3paV
— Catch Up Bites (@catchupbites) July 3, 2024
