தமிழகத்தில் சொத்து பத்திரங்கள் தொடர்பான சேவைகள் அனைத்தும் பத்திரப்பதிவு ஆவணங்கள் முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றது. 2018 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஸ்டார் 2.0 என்ற சாஃப்ட்வேரை மேம்படுத்தும் வகையில் ஸ்டார் 3.0 என்ற புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 1895 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பத்திரங்கள் டிஜிட்டல் முறைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

தமிழகத்தில் விரைவில் இந்த மென்பொருள் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. எனவே மக்கள் இனி சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் வரவேண்டிய அவசியமில்லாமல் ஆன்லைனில் பத்திரங்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.