ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியுடன் மோதிய ஆஸ்திரேலியா அணி தோல்வி அடைந்த நிலையில் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதால் தற்போது அரையிறுதி வாய்ப்பை ஆஸ்திரேலியா இழந்துள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் தற்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடிய நிலையில் மொத்தம் 18995 ரன்கள் குவித்துள்ளார். இதில் 49 சதமாகும். மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டி உட்பட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.