கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திமுக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் விமர்சித்திருந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோரும் விமர்சனம் செய்து பேசியிருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு எதிராக திமுக எம்எல்ஏக்கள் உதயசூரியன் மற்றும் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுகவை தொடர்பு படுத்தி பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் . மேலும் அவர்கள், தங்களது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி செலுத்த வேண்டும், 24 மணி நேரத்தில் இதை செய்யாவிடில், வழக்கு தொடுக்கப்படும் எனக் கூறியுள்ளனர்