இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் அனைத்து வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி முன்னதாகவே வெளியிட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

இந்த நிலையில் தமிழகத்தில் ஜூலை மாதம் 7 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் வங்கிகள் இயங்காது. ஜூலை 13 இரண்டாவது சனி, ஜூலை 27 நான்காவது சனி ஆகிய நாட்களில் வங்கிகள் இயங்காது. அதோடு ஜூலை 17 புதன்கிழமை பக்ரித் தினம் வருவதால் வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.