தெலுங்கானாவில் உள்ள ஹோட்டலில் வாங்கிய பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல உலகத்திற்கு ஏராளமானோர் வந்து சாப்பிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பிரியாணி வந்தவுடன் அந்த நபர் சாப்பிட்டுள்ளார். அப்போது பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு வாடிக்கையாளர் அதிர்ச்சிடைந்தார். இதுகுறித்து ஹோட்டல்ல் உரிமையாளரிடம் முறையிட்டார்.

ஆனால் ஹோட்டல் உரிமையாளர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவம் இடத்திற்கு சென்ற உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஹோட்டலை ஆய்வு செய்தனர். மேலும் உணவு மாதிரியை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆய்வக அறிக்கை வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.