தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அதன்படி இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.