மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை பறி கொடுத்துள்ளது. அதில் முக்கியமான ஒரு தொகுதி தென் சென்னை ஆகும். இங்கு அதிமுக எப்போதும் கணிசமான வெற்றிகளையும் கௌரவமான தோல்விகளையே சந்தித்து வந்தது.
1991, 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் அதிமுக தென்சென்னை தொகுதியில் பெரிய வெற்றியை பெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக இரண்டாவது இடம் பிடித்திருந்தது. ஆனால் 2024 தேர்தலில் திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிக்கு அடுத்து நான்காவது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டு டெபாசிட் இழந்துள்ளது.
