வாக்கு எண்ணிக்கையையொட்டி, நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், சிலர் முன்னதாகவே மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து, கள்ளச்சந்தையில் விற்க முயற்சிக்கின்றனர். பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால் டாஸ்மாக்கில் தனி நபருக்கு அதிகளவில் மதுபாட்டில் விற்கக்கூடாது. இன்று இரவு 10 மணிக்கு பதில் முன்னதாகவே டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.