
ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ள தற்போது அமெரிக்கா கிளம்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் அரை இறுதிக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரரான பிரையன் லாரா அரையிரதுக்கு முன்னேறும் அணிகள் குறித்து தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். அதன்படி வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் என்று கூறியுள்ளார்.