
சென்னையில் உள்ள சர்வதேச தமிழ் படிப்பகம் (international institute of Tamil studies) ஐந்து ஆண்டுகள் பயிலக்கூடிய முதுநிலை தமிழ் பட்டப் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளது. தஞ்சாவூர் தமிழ் படிப்பகத்துடன் இணைந்து தமிழக அரசு இந்த பட்டப் படிப்பை தொடங்கி இருக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 7ம் தேதி வரை பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.