
சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் வளசரவாக்கம் ஜெயநகர் இரண்டாவது தெருவில் உள்ள வீட்டில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது 17 வயது மாணவியிடம் உல்லாசம் அனுபவிக்க வந்த சென்னை மேற்கு சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவர் ஒருவர் சிக்கினார். இதனை தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் சென்னை தியாகராய நகர் டாக்டர் தாமஸ் சாலையை சேர்ந்த பிரபல விபச்சார பெண் தரகர் நதியா (37) தான் சிறுமியை அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனே அவரை கைது செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெண்களை ஆசை வார்த்தை கூறி விபச்சார தொழிலில் ஈடுபடுத்தியதை கண்டறிந்தனர். இதில் மாணவிகளும் அடங்குவர். இந்த நிலையில் அந்தப் பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.