
கேரளாவில் உள்ள கருகப்பள்ளி அருகே ஒரு விடுதி உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றபோது ஒரு பெண் உட்பட 6 பேர் போதையில் இருந்தனர். இவர்கள் போதைப்பொருட்களை பெங்களூருவில் இருந்து கொண்டு வந்து கேரளாவில் விற்பனை செய்துள்ளனர். இந்நிலையில் அங்கு போதையில் இருந்த பெண் மாடல் அழகியான அல்கா போனி (22) என்பது தெரியவந்துள்ளது.
இவரும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் அல்கா போனி உட்பட அவருடன் இருந்த அதுல் (18), முகமது அசார் (18), ரஞ்சித் (24), சூரஜ் (26), ஆசிக் அன்சாரி ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களுடைய செல்போனை ஆய்வு செய்து அதன் மூலம் அவருடன் தொடர்பில் இருக்கும் போதைப்பொருட்கள் வியாபாரிகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.