
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், அடர்லி-ஹில்குரோவ் ரயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக இன்று மற்றும் நாளை 2 நாட்களுக்கு மழை ரயில் சேவை ரத்து செய்யப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த நாளில் முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.