
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சதீஷ்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தீயணைப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர் நேற்று முன்தினம் கோவில் திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வைகை அணையில் குளிக்க முடிவு செய்து அங்கு சென்றுள்ளார். அவர்கள் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் செக் டேம் என்ற இடத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சிவகங்கை மாவட்டத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது தண்ணீர் வேகமாக வந்ததால் திடீரென சதீஷ்குமார் சூழலில் சிக்கினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்த நிலையில், தண்ணீர் அதிகமாக வந்ததால் காப்பாற்ற முடியாமல் போனது. பின்னர் இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதைத்தொடர்ந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர தேடலுக்குப் பிறகு சதீஷ்குமாரை சடலமாக மீட்டனர். அதன் பிறகு அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.