தேர்தல் முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்கள் முறையாக பாதுகாக்கப்பட்டு வரும் பட்சத்தில், ஆங்காங்கே சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பணிபுரியாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வந்தனர். அந்த வகையில் திருச்சியில் வாக்கு இயந்திரங்களுக்கான பாதுகாப்பு வசதி குறித்து துறை வைகோ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். ஈரோடு உள்ளிட்ட சில பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாமல் இருப்பது போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தாலும் திருச்சியில் அதே போல் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் பிரதமர் பிரச்சாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, எதிர்க்கட்சிகளை பிரதமர் குறை கூறுகிறார் என்பதை விட, நம் நாட்டின் பிரதமருக்கு உண்டான செயல்பாடுகள் அவரிடம் இல்லை என்பதை கவனிக்க வேண்டும். தொடர்ந்து அவர், மதம், ஜாதி மூலம் பிரிவினை ஏற்படுத்தி வாக்கு சேகரித்து வருகிறார். இந்திய வரலாற்றில் இப்படியான பிரதமருடைய பிரச்சாரத்தை கண்டதில்லை. இது கண்டிக்கத்தக்க ஒரு செயல். தேர்தல் விதிமுறையின் படி நீங்கள் மதத்தை, ஜாதியை சுட்டிக்காட்டி பரப்புரை செய்யக்கூடாது என்பது விதிமுறை.

ஆனால் தொடர்ந்து ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல, பல நாட்களாக இந்த பிரிவினை பிரச்சாரம் தொடர்ந்து கொண்டு மோசமாக செல்கிறது. இது குறித்து பல எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக புகார் அளித்துள்ளனர். ஆனால் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் இந்த செயல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருவதாக நாங்கள் தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறோம் அது சரியாகத்தான் இருக்கிறது.