
ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு வெற்றி பெற வேண்டும் என வேண்டிக் கொண்டு நபர் ஒருவர் தனது நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டம் பஞ்சாரா ஹில்ஸ் ஸ்ரீநகர் பகுதியை சேர்ந்த செவ்வாலா மகேஷ் என்பவர் தனது நாக்கை அறுத்துக் கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து கடிதம் ஒன்றை எழுதிய அவர், இதே போன்று கடந்த காலங்களில் இரண்டுமுறை தனது நாக்கை அறுத்துக் கொண்டேன் என கூறியுள்ளார்.