தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா ஜோதிகா தம்பதிகள். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது. ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலை காட்டாமல் இருந்த நிலையில் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில்  நடிகர் சூர்யா தன்னுடைய  மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோரோடு மும்பையில் குடியேறியதால் ஜோதிகாவுக்கு, மாமனார் மாமியாருடன் தகராறு. சூர்யாவுடன் விவாகரத்து என்றெல்லாம் செய்திகள் பரவியது. ஆனால் அதெல்லாம் வதந்தி என தெரியவந்தது. இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள  பயில்வான், “ஜோதிகா போதையில் ஏதும் உளறினாரா? என்று தெரியவில்லை. படத்தின் ப்ரோமோஷனுக்கு மும்பையிலிருந்து சென்னை வந்த அவர் பேட்டியும் கொடுத்துவிட்டு மீண்டும் மும்பைக்கே சென்றுவிட்டார். ஜோதிகாவுக்கு சென்னை என்றால் வேப்பங்காய் என்று முன்பே நான் சொன்னேன். இப்போதும் சென்னை வந்த அவர் தனது மாமனார், மாமியாரை பார்க்கவில்லை. அவர்களது முகத்தில்கூட முழிக்கக்கூடாது என்றுதான் மும்பைக்கே சென்றுவிட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.