பொது இடத்தில் கிழிந்த ஆடையுடன் இருந்த பெண்ணுக்கு தன்னுடைய ஆடையை கழற்றி கொடுத்த இளைஞரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இது குறித்து வெளியாகி உள்ள வீடியோவில் பெண் ஒருவர் தனது நண்பருடன் பேருந்து நிலையத்திற்கு வந்து அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டிருக்கிறார்.

பின்னர் இருவரும் எழுந்து செல்லும் போது திடீரென அந்த பெண்ணின் ஆடை கிழிந்து விடுகிறது. உடனே அந்தப் பெண் செய்வதறியாது நிற்கும் நேரத்தில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மற்றொரு இளைஞர் அவருடைய ஆடையை கழற்றி கொடுக்கின்றார். அந்தப் பெண்ணுடன் வந்த ஆண் நண்பர் இதனை செய்யாமல் ஏளனமாக சிரித்துக் கொண்டு நிற்கின்றார். முதலில் அந்தப் பெண் தயங்கினாலும் அதன் பிறகு அதனை வாங்கி அணிந்து கொள்கின்றார். முதலில் இளைஞரின் தோற்றத்தைக் கண்டு பேசக்கூட விரும்பாத நபர் அவருக்கு சல்யூட் அடிக்கின்றார். இந்த மனிதநேயம்முடைய சம்பவம் இணையத்தில் வீடியோவாக வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Abhi 🖤 இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@writer_abhi__143)