140 வழித்தடங்களில் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய அழுத்தம் கொடுப்பதாக தொழிலாளர் நலத்துறையிடம் தொழிற்சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் இதேபோல் 12 மணிநேரமாக வேலைநேரம் மாற்றப்பட்டது. அப்போது போக்குவரத்து ஊழியர் சங்க எதிர்ப்பை தொடர்ந்து அது கைவிடப்பட்டது. இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு மீண்டும் இம்முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.