கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தனது தோள் மீது கைபோட்ட காங்கிரஸ் நிர்வாகியை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது. சரவரனுருக்கு அவர் சென்றபோது காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, ஒருவர் திடீரென தோள் மீது கையை போடவே, ஆத்திரமடைந்த சிவக்குமார், அவரை சடாரென அடித்தார். இதைக்கண்ட போலீசார், அந்த நிர்வாகியை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர்